BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Category 1

Category 2

Category 3

Category 4

Sunday, July 19, 2015

நிலம் எடுத்தல் சட்டம்: ஜெயலலிதாவின் திடீர் ஞானோதயம் தேர்தலுக்கானதா?: பாமக கேள்வி - www.dhinasari.com / Tamil News Portal : தினசரி தமிழ்ச் செய்திகள் www.dhinasari.com / Tamil News Portal : தினசரி தமிழ்ச் செய்திகள்

Friday, May 9, 2014

ஜல்லிக்கட்டுக்குத்தடை! பாரத பாரம்பரியத்தை அழிக்கும் பன்னாட்டு சதி!

ஜல்லிக்கட்டுக்குத்தடை!
பாரத பாரம்பரியத்தை அழிக்கும் பன்னாட்டு சதி!

பிராணி வதைத் தடுப்புச் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பிராணி வதைத் தடுப்புச் சங்கம் வாதிட்டது ஒரு நாடகம் என்பது உண்மை!
நமது நாட்டின் பாரம்பரியத்தை சிதைக்க பன்னாட்டு என்.ஜி.ஓ. அமைப்பினர் பல வழிகளை கையாண்டு வருகிறார்கள். உதாரணமாக பட்டாசுக்கு எதிரான பிரச்சாரம், வழக்கு முதலானவைகளை எடுத்துக்கொள்ளலாம். முதலில் குழந்தைத் தொழிலாளர்கள் என்றும், ஒலி, காற்று மாசு என்றும், அதன்பிறகு பட்டாசுக்கு செலவிடும் காசை நல்ல செயலுக்கு பயன்படுத்தலாமே என்று பசப்புகிறார்கள். இவர்களுக்கு சில அறிவுஜீவிகளும் ஒத்து ஊதினர். வறட்சி மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரமாகவும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பரவசப்படுத்திடும் ஒரு நாள் கொண்டாடப்படும் தீபாவளியை சீர்குலைக்கவும் இந்த சதி என்பதை இந்து முன்னணி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
அதுபோல, ஜல்லிக்கட்டு என்பது நமது நாட்டின் பெருமைமிகு காளைகளை பாதுகாத்து வருகிறது. இளைஞர்களிடம் வீரத்தை ஏற்படுத்தி வருகிறது. சிலரின் தவறான வழிமுறையால் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்பதைத் தடுக்க முறைப்படுத்துவதை விடுத்து ஜல்லிக்கட்டை தடுப்பது சரியான செயலா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு வருடத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நடத்தப்படுகிறது. குதிரை பந்தயமோ மாதந்தோறும் நடத்தப்படுகிறது. அதிலும் குதிரைகள் துன்புறுத்தப்படுகிறது. ஆனால் அதை தடை செய்ய ஏன் வலியுறுத்தவில்லை. அது சூதாட்டம்! மிருக வதை! ஏன் அதைத் தடுக்க பிராணி வதைத் தடுப்புச் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை?!
தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் புளிமூட்டைப்போல காளைகளையும், பசுக்களையும் கன்றுக்களையும் உயிரோடு கொன்று கசாப்பிற்கு எடுத்துச் செல்லும் கொடுமையை எதிர்த்து பிராணி வதைத் தடுப்புச் சங்கம் வழக்குத் தொடுத்துள்ளதா? அதை ஏன் முழுமையாகத் தடுக்க முற்படவில்லை? இவர்களது நோக்கம் பிராணி வதையா அல்லது பாரம்பரியத்தை அழிப்பதா?
அதுமட்டுமல்ல ஜல்லிக்கட்டிற்காக வளர்க்கப்படும் நமது நாட்டின் காளைகள் கசாப்பிற்கு விற்கப்பட்டு அழிக்கப்படவே இந்தத் தடை உதவும். இதன் மூலம் நாட்டு மாடுகள் இல்லாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயத்தை உணரவேண்டும்.  நமது நாட்டில் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், பாரம்பரிய இடங்கள் எல்லாம் நமது வழிபாடு, விழாக்கள், பண்டிகைகள், நம்பிக்கைகள் முதலாவற்றோடு பிணைத்திருப்பதால் காக்கப்படுகின்றன.
இவ்விஷயத்தில் மாநில அரசு மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக பராம்பரியத்திற்கும் மதிப்பளித்து ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கவும், தகுந்த விதிமுறைகளை வகுத்து முறையாக திருவிழாக்கள் நடைபெறவும், ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்திடவும் வழிகாண வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

பிஷப் கால்டுவேல் தமிழறிஞரா? தமிழுக்கு தொண்டு செய்தாரா? இதில் மட்டும் அதிமுக, திமுக போட்டாபோட்டி ஏன்?

பிஷப் கால்டுவேல் தமிழறிஞரா? 
தமிழுக்கு தொண்டு செய்தாரா?
இதில் மட்டும் அதிமுக, திமுக போட்டாபோட்டி ஏன்?

பிஷப் ராபர்ட் கால்டுவேல் தமிழறிஞராகவும், தமிழை உயர்தனி செம்மொழியாக உணர்த்தியவர் என்று  திமுக தலைவர் கருணாநிதி கூறியவந்த பொய் மூட்டையை, இப்போது அதிமுகவும் வழிமொழிய முந்துகிறது. ஏன்? இவர்களது நோக்கம் யார் கிறிஸ்தவர்களின் ஓட்டை அள்ளுவது என்பதில்தான் இருக்கிறது.
பிஷப் கால்டுவெல், தமிழ் படித்ததன் காரணம் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்கும், இந்துக்களை மதமாற்றம் செய்யவும், தமிழக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ஆங்கிலேயன் தொடர்ந்து இங்கு ஆட்சி செய்யவும் தான்.  அதனாலேயே ஆரிய-திராவிட இனவாதம் எனும் மோசடி விஷத்தை விதைத்தவர்.
இப்படியே போனால் திமுகவும், அதிமுகவும் மெக்காலேவுக்கும் கூட விழா எடுக்க தயங்கமாட்டார்கள்.  மெக்காலேவால் தமிழக மக்கள் கல்வி அறிவு பெற்றனர் என்றுகூட வாதிடுவார்கள்.
இவர்கள் தமிழறிஞர்களுக்கு மரியாதை செய்பவர்களா? என்றால் இல்லை என்பதே பதிலாகும். கடந்த காலங்களில் யார் யாருடைய நூற்றாண்டு விழாவை எல்லாம் திமுகவும், அதிமுகவும், அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை என்பதற்கு பெரிய பட்டியலே இருக்கிறது. உதாரணமாக மு.வரதராசனார், வையாபுரி பிள்ளை, ஔவை துரைசாமி பிள்ளை, புலியூர் கேசிகன் என பலரைக் குறிப்பிடலாம். இவர்கள் செய்த தமிழ்த்தொண்டை அங்கீகரிக்க தமிழகத்தை ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் முன்னெடுக்கவில்லை. ஏன்? இவர்கள் பின்னால் ஓட்டு வங்கி உள்ள மிஷனரிகள் இல்லையே!
தமிழ்த் தாத்தா எனப்போற்றப்படும் உ.வே.சா.வின் பெயரை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கோ, அல்லது பல்கலைக்கழகத்திற்கோ வைக்கவில்லை. அவர் மட்டுமல்ல, இன்னமும் பல தமிழறிஞர்களை மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள், மறைக்கப்பட்டுள்ளார்கள். உதாரணமாக தணிகை செங்கல்வராயர், அவர் தனி ஒரு மனிதராக செய்த தமிழ்த்தொண்டை, இன்றும் ஒரு பல்கலைக்கழகத்தால்கூட செய்ய முடியாது!
பிஷப் கால்டுவெல், தமிழை மட்டுமல்ல, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளையும் படித்து பாண்டியத்தியம் பெற்றார். ஆனால் கேரளாவிலோ, கர்நாடகாவிலோ அவரை கொண்டாடவில்லை!
தமிழ் செம்மொழி என்பதை கால்டுவெல் கூறினார் என்பதற்கு எந்தவித ஆதாரம் கிடையாது. வழக்கம்போல் கருணாநிதி அவர்கள் கதைக்கும் விஷயமே இது.
தமிழ் மொழியை வைத்து அரசியல் நடத்துவது திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கைவந்த கலை. ஆனால், தமிழர்களை கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற சேவைக்குப் பலியாக்க வேண்டாம் என்று இந்து முன்னணி எச்சரிக்கிறது. தமிழ் மீது இவர்களுக்கு உண்மையில் பற்று இருக்குமானால், உண்மையான தமிழறிஞர்களுக்கு மரியாதை செய்யுங்கள், போற்றுங்கள் அது வருங்கால இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
 
(இராம கோபாலன்)

Tuesday, May 6, 2014

பிரிவினைவாதியும் தமிழ்விரோதியுமான கால்டுவெல்லுக்கு தமிழக அரசே 200ம் ஆண்டு நிறைவு விழா எடுப்பது தமிழருக்கு அவமானம்

ராபர்ட் கால்டுவெல்லின் தமிழ்ப் பணியைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது 200வது ஆண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. அறிவியல், மொழியியல், வரலாறு, பண்பாடு என அனைத்து மட்டத்திலும் மிகத் தவறு என்று நிரூபிக்கப்பட்ட மோசடியான, ஆரிய-திராவிட இனவாதத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல்.
கிறிஸ்துவ மதமாற்றத்திற்காக தமிழகம் வந்து தமிழ் படித்து, தமிழைத் திரித்து சூழ்ச்சி செய்து தமிழர்களைப் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிரித்தவரே இந்த ராபர்ட் கால்டுவெல். தமிழர் வரலாறு என்ற போர்வையில் சாதிச் சண்டைகளை ஊக்குவிக்கும் விதமாக இவர் எழுதிய பல கருத்துகள் ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு இன்றும் தீராத பிரச்னைகளாக நம் முன் தலைவிரித்தாடுகிறது. கமுதி வழக்கில் நாடார்கள் தீண்டத்தகாதவர்கள் என்று வெள்ளையர்கள் தீர்ப்பளித்ததற்கு இவரின் சமூக வரலாற்று ஆய்வே காரணமானது. இதன் விளைவாக தென்தமிழகத்தில் அதிக அளவில் வசிக்கும் நாடார்கள் பெருமளவில் மதம் மாற்றப்பட்டார்கள்.
கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் தமிழைச் செம்மொழி என்று உணர்த்தியவர் கால்டுவெல் என்று அவர் அறிவித்தார். கால்டுவெல் தமிழை உயர்தனிச் செம்மொழியாக எங்கும் குறிப்பிடவில்லை. கால்டுவெல் செந்தமிழ், கொடும் தமிழ் என்று தமிழை இரண்டாகப் பிரித்துக் காட்டிய தொல்காப்பியத்தின் மரபை மட்டுமே சுட்டிக் காட்டினார். உலக வரிசையில் உயர்தனிச் செம்மொழியான ஐந்து மொழிகளுடன் கால்டுவெல் தமிழை அங்கீகரித்துச் சொல்லவில்லை. கால்டுவெல் எழுதிய ஒப்பிலணக்கன நூலில் ஹல்ல கன்னடா என்று, கொடும் கன்னடம், செம்மையான கன்னடம் என்ற கன்னட மரபையும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கன்னட மொழிக்கு முகவரி கொடுத்தவர் கால்டுவெல் என்று எந்த கன்னடக்காரர்களும் போற்றுவதில்லை.
தமிழர்களை மதமாற்றுவதற்கு அந்நிய கிறிஸ்துவ மதத்திற்கு சில அடையாளங்கள், பிம்பங்கள் தேவைப்பட்டது. அதற்காக மோசடியாக உருவாக்கப்பட்டவரே ராபர்ட் கால்டுவெல். தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்க்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்த கால்டுவெல்லுக்கு விழா எடுப்பது தமிழருக்கும் தமிழினத்துக்குமே அவமானம். ஆகவே ஓட்டு அரசியலை ஒதுக்கிவைத்து, தமிழ்த் துரோகிகளுக்கு அங்கீகாரம் தரும் ஈனச் செயல்களை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிடுமாறு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கேட்டுக் கொள்கிறது.
- பால.கெளதமன்

Thursday, March 27, 2014

உஷ்....

உஷ்...
 
Copyright © 2013 கலக்கக்குரல்
Shared by WpCoderX